வாகன ஓட்டிகள் அவதி: காமராஜர் சாலை சீரமைப்பு கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் !

X
ஹோப் கல்லூரி முதல் சிங்காநல்லூர் வரை உள்ள காமராஜர் சாலை மோசமாக சேதமடைந்து இருப்பதால், அதை சீரமைத்து விரிவுபடுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிங்கை நகர செயலாளர் ஆர்.மூர்த்தி தலைமையிலானார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், அஜய்குமார், தெய்வேந்திரன், பீளமேடு நகர செயலாளர் மேகநாதன், கவுன்சிலர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தனர்.
Next Story

