கரூரில் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும். ஹேமா மாலினி கரூரில் பேட்டி.
கரூரில் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும். ஹேமா மாலினி கரூரில் பேட்டி. கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற அரசியல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட துயரசம்பவத்தில் 41 பேர் பலியாகினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவத்தை பற்றி விசாரிக்கவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கவும் அகில இந்திய பாஜக தலைவர் ஜே பி நட்டா அமைத்துள்ள ஹேமா மாலினி தலைமையில் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 8 எம்பிக்கள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் குழு இன்று டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை வந்து அங்கிருந்து கரூருக்கு வந்த அவர்கள் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தைபார்வையிட்டனர். அதன் பிறகு பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் இல்லம் சென்று சந்தித்தனர். மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்த பிறகு செய்தியாளர்களை ஹேமமாலினி சந்தித்தார். அப்போது இந்த சம்பவத்தில் சிறு குழந்தைகள் கூட பலியான விவகாரம் மனதை வெகுவாக பாதித்துள்ளது. சனிக்கிழமை அன்று கரூரில் வார சம்பளம் வழங்கும் நாள் என்பதால் அன்று மாலை இயல்பாகவே அதிகப்படியான மக்கள் வந்து செல்வார்கள். இந்த நேரத்தில் சற்று கால தாமதமாக வந்த விஜய்யை பார்ப்பதற்காக வந்தவர்கள் இந்த துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தது போல இன்னொரு சம்பவம் இனிமேல் நடந்து விடக்கூடாது. குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் ஆக இருந்தாலும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு செய்த அதிகாரிகள் தரப்பிலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது. எனவே இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க சிபிஐ விசாரணை வேண்டும் என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின் போது பிஜேபி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். .
Next Story





