ரயில் பாதையில் உள்ள பாலங்கள் பராமரிக்கும் பணி-ரயில் சேவைகளில் மாற்றம்
ரயில் பாதையில் உள்ள பாலங்கள் பராமரிக்கும் பணி-ரயில் சேவைகளில் மாற்றம். ஈரோடு - கரூர் ரயில் வழித்தடத்தில் உள்ள பாலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.அது குறித்த விவரம். திருச்சிராப்பள்ளி சந்திப்பு – ஈரோடு சந்திப்பு பயணிகள் ரயில், திருச்சிராப்பள்ளி சந்திப்பில்– காலை 07.20 மணிக்கு புறப்படும். இது அக்டோபர் 03 & 09, 2025 அன்று கரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பு – கரூர் சந்திப்புக்கு மட்டுமே இயக்கப்படும். மேற்கூறிய தேதிகளில் கரூர் சந்திப்பு – ஈரோடு சந்திப்புக்கு இயக்கப்படாது. 2.ஈரோடு சந்திப்பு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், ஈரோட்டிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அதற்கு பதிலாக அக்டோபர் 03 & 09, 2025 அன்று மதியம் 3.05 மணிக்கு கரூர் சந்திப்பு – ஈரோடு சந்திப்பு எக்ஸ்பிரஸ் புறப்படும். மேற்கூறிய தேதிகளில் இந்த ரயில் ஈரோட்டிலிருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது. 3. செங்கோட்டை - ஈரோடு சந்திப்பு எக்ஸ்பிரஸ் ரயில், அக்டோபர் 03 & 09, 2025 அன்று கரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மேற்கூறிய தேதிகளில் கரூர் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு சந்திப்புக்கு ரயில் இயக்கப்படாது என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story




