பர்கூர்: யானை தாக்கிய மூதாட்டி படுகாயம் மருத்துவமனை சிகிச்சை

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்ன மட்டராபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மனைவி மாரி(65)இவர் தனது விவசாய நிலத்தில் குடிசை அமைத்து அதில் விவசாய நிலங்களை பராமரித்து வரும் நிலையில் நேற்று அதிகாலை அந்த பகுதியில் சுற்றி திரிந்து காட்டு யானை ஒன்று குடிசையில் தூங்கிய மூதாட்டியை தாக்கி விட்டு சென்றது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story

