ஆயுத பூஜையின் போது பூசணிக்காய் நடுரோட்டில் உடைக்க வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்செங்கோட்டில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பிரச்சார வாகனம் இயக்கம்

ஆயுத பூஜை கொண்டாட்டங்களின் போது ரோட்டில் பூசணிக்காய் உடைக்க கூடாது, அவ்வாறு உடைத்தால்  ஏற்படும்விளைவுகள் குறித்து விளக்கும்வகையில் பிரச்சார நிகழ்ச்சி நடந்தது மோட்டார் சைக்கிளில் வந்துசாலையில் பூசணிக்காயால் சரிந்துவிழுந்து ஆம்புலன்ஸ் உதவிஉடன்காப்பாற்றுவது போல் செயல் விளக்கம் செய்து காண்பிக்கபட்டது
நம் பண்டிகை கால கொண்டாட்டங்கள் வழிபாடுகள் மற்றவர்களுக்கு திண்டாட்டங்களை உருவாக்கி விடக்கூடாது துயரத்தை உருவாக்கிக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆயுத பூஜை கொண்டாட்டங்களின் போது சாலைகளில் பூசணிக்காய் உடைக்க கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்பிரச்சார வாகனத்தை அனுப்பியும் அதையும் மீறி பூசணிக்காய் உடைக்கப்பட்டு இருந்தால்சாலைகளில் கிடைக்கும் பூசணிக்காய்களை நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் அகற்றும் பணியையும் செய்து வருகின்றனர் அதன்படி இந்த ஆண்டும் திருச்செங்கோடுரெட் ராக் சங்கம், பரணி அறக்கட்டளை, நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை, திருச்செங்கோடு நகராட்சி ஆகியவை இணைந்துபூசணிக்காய் உடைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடத்தினார்கள்.நிகழ்ச்சிக்கு பரணி அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் பரணிதரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சியின் போது பூசணிக்காய் சாலையில் உடைப்பதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் எப்படி விலைக்கு வருகிறார்கள்? அதனால் ஏற்படும் காயங்கள் என்ன அவர்களை எப்படி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறார்கள் என்பது குறித்த செயல்முறை விளக்கம் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பரணி அறக்கட்டளை நிர்வாகி வக்கீல் பரணிதரன்,நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகி குமார்,ரெட் ராக் ரோட்டரி சங்க நிர்வாகிகுணவேல்மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல் ராதா சேகர் புவனேஸ்வரி உலகநாதன் செல்லம்மாள் தேவராஜன் சினேகா ஹரிகரன் ஆகியோரும்வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.செய்முறை விளக்கத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர்.தொடர்ந்து சாலையில் பூசணிக்காய் உடைக்க கூடாது என்ற பிரச்சாரம் வைக்கப்படும் எனவும் நாளை காலை முதல் பூசணிக்காய் யாராவது தெருவில் உடைத்து இருந்தால் அதனை நகராட்சி தூய்மை பணியாளர்கள் உதவியுடன் அவ்வப்போது அகற்றி விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சாலையில் பூசணிக்காய் உடைப்பதால் நமது பண்டிகை கால கொண்டாட்டங்கள் மற்றவர்களுக்கு திண்டாட்டங்களை உருவாக்கி விடுகிறது எனவே பாதுகாப்பாக ஓரமாக மற்றவர்களுக்கு தொல்லை தராத வகையில் பூசணிக்காய் ரோட்டின் ஓரங்களில் உடைக்க வேண்டும் எனவும் பொதுமக்களை கேட்டுக் கொள்வதாக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தெரிவித்தார்.
Next Story