ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

X
Rasipuram King 24x7 |30 Sept 2025 8:16 PM ISTராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2025-2027ம் ஆண்டின் தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 29ம் தேதியன்று நடைப்பெற்றது. தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் வரவேற்கப்பட்டது. இதில், தலைவர் பதவிக்காக காமராஜ், செயலாளர் பதவிக்காக தங்கதுரை, பொருளாளர் பதவிக்காக கமலநாதன் அவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மேற்படி பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத காரணத்தினால், மேற்படியார்களை ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர்களால் அறிவிக்கப்பட்டது. ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சக வழக்கறிஞர்கள் பொன்னாடை அணிவித்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் புதிதாக வெற்றி பெற்ற தலைவர், செயலாளர், பொருளாளர் அனைவருக்கும் வழக்கறிஞர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்..
Next Story
