உடல்நிலை சரியில்லாமல் இறந்த விவசாய கூலி

X
Komarapalayam King 24x7 |30 Sept 2025 8:32 PM ISTகுமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் விவசாய கூலி உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வசிப்பவர் மாது, 70. விவசாய கூலி. இவர் பல வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இவர், இவரது மகன் சுப்ரமணி, 36, என்பவர் வீட்டில் வசித்து வருகிறார். செப். 27ல் சுப்பிரமணி, அவரது மகனுக்கு உடல்நலக்குறைவு என்பதால் கோபிக்கு சென்று விட்டார். இந்நிலையில் செப். 28ல் மாதுவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால், அவரை, மாதுவின் சகோதரி பெருமாயி, ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர், மாது இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி சுப்ரமணிக்கு தகவல் தர, அவரும் நேரில் வந்து, அப்பாவின் சடலத்தை பார்த்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
