பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததால் கூலி தொழிலாளி தற்கொலை

X
Komarapalayam King 24x7 |30 Sept 2025 8:41 PM ISTகுமாரபாளையம் அருகே மகளிர். குழுக்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் அருகே உள்ள ஏரித்தெரு லைன் வீட்டில் வசிப்பவர் அப்புசாமி, 42. கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி பிரேமா என்ற மனைவியும், அஜய் மற்றும் பவித்ரா என்ற மகனும் மகளும் உள்ளனர். தனது மகள் திருமணத்திற்காக அப்புசாமி மகளிர் குழுக்களில் கடன் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக கடனை திருப்பி செலுத்தி வந்த நிலையில், கடனுக்கான தவணைத் தொகை செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக மகளிர் குழு கடன் வ௲லிப்பாளர் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளில் பேசுவதால், தன்னால் பணம் திரும்ப செலுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மனமடைந்து நேற்று காலை 06:30 மணியளவில் திடீரென தனது மனைவியின் சேலையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் அப்புசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்புசாமி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
