ராஜேஷ்குமார் எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்..

X
Rasipuram King 24x7 |30 Sept 2025 8:50 PM ISTராஜேஷ்குமார் எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்..
வெண்ணந்தூர் ஒன்றியப் பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகி மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திமுகவில் இணைந்தனர். வெண்ணந்தூர் ஒன்றியம் மதியம்பட்டி ,ஒ.சௌதாபுரம், மின்னக்கல் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சுமார் 50 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடாசலம் ஏற்பாட்டில், இவர்கள் நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். கட்சியில் இணைத்தவர்கள் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி தேர்தல் பணியாற்றிட வேண்டும் என கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றியத் திமுக செயலாளர் ஆர்எம்.துரைசாமி, சார்பு அணி அமைப்பாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story
