ஆட்சியைக் கண்டித்து சாமானிய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

X
Komarapalayam King 24x7 |30 Sept 2025 9:14 PM ISTஉயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் சாமானிய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியில் சின்ன பள்ளம் ஓடை உள்ளது இந்த ஓடையில் மழைக்காலங்களிலும் குமாரபாளையம் அருகே உள்ள ஏரிகள் நிரம்பினாலும் வெளியேறும் நீர் காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் சுமார் 40 அடி அகலத்தில் அமைந்துள்ளது ஆனால் இதனை சிலர் ஆக்கிரமித்து ஓடையை மரித்து சாய தொழிற்சாலைகளை கட்டி சாயக் கழிவு நீரை வெளியேற்றும் சிறிய சாக்கடை கால்வாயாக மாற்றி உள்ளனர் தங்களை அகற்ற வலியுறுத்தி பழனியப்பன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் கடத்த 2024 ஆம் வருடம் உயர் நீதிமன்றத்தை தொடர்ந்த வழக்கின்படி உயர்நீதிமன்றம் ஓடை ஆக்கிருப்புகளை அகற்றி நீர்வழிப் போக்கை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு ஆண்டு கடந்த பிறகும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்து சாமானிய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ சிபிஎம் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் என 50 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
Next Story
