தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

X
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நவ. 17-ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம்.
Next Story

