புதுக்கோட்டை: கடன் தொல்லையால் தீக்குளித்த பெண்
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் என்பவரின் மனைவி ராதிகா (37). ஞானவேல் தனியார் டிராவல்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் நிலையில் தனியார் நிதி நிறுவங்களில் வீட்டுக் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தவணைத் தொகையை கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் போன் செய்து திட்டியுள்ளனர். இதனால் மனஉளைச்சளுக்கு ஆளான ராதிகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Next Story




