வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் முன்பு ஆர்ப்பாட்டம்.

வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் முன்பு ஆர்ப்பாட்டம்.
X
வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர், அக்.1- அரியலூர் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு என கூறி வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்தும் வீட்டுமனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர். ஆர்.மணிவேல், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.கந்தசாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை சிபிஎம் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி தொடங்கி வைத்தார்.சிபிஎம் கட்சி அரியலூர் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  கே.கிருஷ்ணன், ஆண்டிமடம் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் இளவரசன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம்,  தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், திருமானுர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சாமிதுரை, செந்துறை வட்ட செயலாளர் கு.அர்ச்சுனன், ஆண்டிமடம் வட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், திருமானூர், வாரியங்காவல், தஞ்சாவூரான் சாவடி, உடையார்பாளையம், மேலூர், மருதூர், நாகமங்கலம், காட்டுபிரிஞ்சியம் வீரசோழபுரம் மெய்காவல்புத்தூர் காமராஜ் நகர், மீன்சுருட்டி, குண்டவெளி, ஜெயங்கொண்டம், கீழக்குடியிருப்பு சின்னவளையம், கூத்தங்குடி, தா.பழூர், தாதம்பேட்டை, பாலசுந்தரபுரம், கூத்தங்குடி, அனைக்குடம், ஆண்டிமடம், அழகாபுரம், ஓலையூர், நரசிங்கபாளையம், விக்கிரமங்கலம், செந்துறை, இரும்புலிக்குறிச்சி, வாழரைக்குறிச்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமம் மற்றும் நகர பகுதிகளில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் வீடுகளை நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ளதாக கூறி வருவாய் துறையினர் இடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்  இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியும் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு மனு கொடுக்கும் போராட்டம்  நடைபெற்றது போராட்டத்தில் பல தலைமுறைகளாக குடியிருப்பவர்களை நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பதாக கூறி வீடுகளை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை கைவிட வேண்டும், வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் மற்றும் வீடு வழங்க கோரியும் மனு கொடுத்துள்ள  மனுதாரர்களின் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குருவாலப்பர்கோயில் டு  பள்ளிவிடை முத்துசேர்வாமடம், குண்டவெளி (கிழக்கு) வழியாக மீன்சுருட்டிக்கு புறவழிச் சாலை அமைப்பதற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை 1956 சட்டப்படி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மாற்றி  விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2013 சட்டப்படி விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நீர் நிலைகளில் குடியிருப்போர், கோயில் நிலங்களில் குடியிருப்போர், விவசாய நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர்  சம்பந்தப்பட்ட அந்தந்த இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வகை மாற்றம் செய்து பட்டா வழங்கிட கேட்டும்,  வீடு வழங்க கோரியும் பொதுமக்களால் கொடுக்கப்பட்ட 1500 -க்கும் மேற்பட்ட மனுக்களை வருவாய் துறை அதிகாரிகளிடம் வழங்கினார். மாவட்ட நிர்வாகம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குழந்தைகள் மற்றும் ஆடு, மாடுகள் மற்றும் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில்  ஆர் செந்தில் வேல் தி தியாகராஜன் ஜெ வரப்பிரசாதம் ஆர் வைத்திலிங்கம் எஸ் உத்திராபதி கே அறிவழகன் ஆர் மேகரஜன் எம் மகேந்திரன் கா வேம்பு அ பல்கீஸ் பி ஆர் தனவேல் எ சேகர் எஸ் மீனா கே பன்னீர்செல்வம் டீ கருப்பையா எம் சங்குபாலன் கே லட்சுமணன் ஏ சுந்தரமூர்த்தி ஆர் சொக்கலிங்கம் ஆர் காசிநாதன் கு ஆகாஷ்வீரன் மற்றும் அரியலூர், திருமானூர், வாரியங்காவல், தஞ்சாவூரான் சாவடி, உடையார்பாளையம், மேலூர், மருதூர், நாகமங்கலம், காட்டுபிரிஞ்சியம் வீரசோழபுரம் மெய்காவல்புத்தூர் காமராஜ் நகர், மீன்சுருட்டி, குண்டவெளி, ஜெயங்கொண்டம், கீழக்குடியிருப்பு சின்னவளையம், கூத்தங்குடி, தா.பழூர், தாதம்பேட்டை, பாலசுந்தரபுரம், கூத்தங்குடி, அனைக்குடம், ஆண்டிமடம், அழகாபுரம், ஓலையூர், நரசிங்கபாளையம், விக்கிரமங்கலம், செந்துறை, இரும்புலிக்குறிச்சி, வாழரைக்குறிச்சி உள்ளிட்ட 1000 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளி மக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரமசிவம் நன்றி கூறினார். ,
Next Story