ஆயுதபூஜை விற்பனைக்கு ஆயிரகணக்கில் குவிக்கப்பட்ட வாழை தார்கள்

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வாழைத்தார் சந்தைக்கு ஆயுத பூஜை விற்பனைக்காக ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வாழைத்தார்கள் வெட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் விவசாயிகளும் அதிகப்படியான வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர் விழா காலங்களுக்கான தேவை அதிகமாக இருந்த காரணத்தினால் வியாபாரிகள் வாழைத்தார்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர் வரத்து அதிகம் இருந்த போதிலும் ஒவ்வொரு வாழைத்தார்களின் தன்மைக்கு ஏற்ப போதிய விலை கிடைத்தது செவ்வாழை தார் ஒன்று ரூபாய் 500 முதல் ரூபாய் 1400 வரை விற்பனையானது. ரஸ்தாளி தார் ஒன்று ரூபாய் 500 முதல் 700 வரை விற்பனையானது. கற்பூரவல்லி தார் ஒன்று ரூபாய் 250 முதல் ரூபாய் 700 வரை விற்பனையானது. இதேபோல் பூவன் தார் ஒன்று ரூபாய் 300 முதல் ரூபாய் 600 வரை விற்பனையானது நாட்டு வாழைதார் ஒன்று ரூபாய் 300 முதல் ரூபாய் 600 வரை விற்பனை செய்யப்பட்டது இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story

