டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

X
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் மொகா லாபகாஜ் , ராம்புராவை சேர்ந்த மகேஷ் (61) என்பவர் டிராக்டர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் சிவகாசிக்கு டிராக்டர் டெலிவரி செய்வதற்காக விருதுநகர் நான்கு வழிச்சாலை கீழக் குயில்குடி அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மகேஷ் பலியானார். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

