செண்பகவல்லி அம்மன் கோவிலில் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி

செண்பகவல்லி அம்மன் கோவிலில் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி
X
செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி
தூய்மையே சேவையை வலியுறுத்தி பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், நகராட்சி, எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் சார்பில் செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் தூய்மைப் பணி நடைபெற்றது.  நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், நகராட்சி தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள், குப்பையில்லா நகரத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநர் நாராயணசாமி, ரோட்ராக்ட் சேர்மன் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் பழனிக் குமார் அனைவரையும் வரவேற்றார்.  தூய்மை பணியினை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் முத்துச்செல்வன் துவக்கி வைத்தார். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், ரத்தினக் குமார், வக்கில் பாலசுப்பிரமணியன், இளங்கோ, கண்ணன்,ராஜமாணிக்கம், பூல்பாண்டி, நடராஜன், கோவில்பட்டி நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள்,மாணவர்கள்,உள்பட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Next Story