மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம்

மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம்
X
தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டத்தில், மூத்த வியாபாரிகள் 11 பேருக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டத்தில், மூத்த வியாபாரிகள் 11 பேருக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் அன்புராஜ் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் மரகதராஜ் வரவேற்றார். முன்னதாக கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் பீட்டர், மாநில துணைத் தலைவர் வெற்றிராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில், சங்கத்தின் மூத்த வியாபாரிகள் 11 பேருக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி, பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ், கோவில்பட்டி வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பிரையன்ட்நகர் வியாபாரிகள் சங்க செயலாளர் சுகன்யா செந்தில்குமார், 3வது மைல் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபாலன், ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைத்தலைவர், துணைச்செயலாளர்கள் மற்றும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story