முதலமைச்சா் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு

X
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் சாா்பில் மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை போட்டிகள் வண்டலூரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். வரும் 02.10.2025 முதல் 14.10.2025 வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஆய்வில் திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி, மாவட்ட விளையாட்டுஅலுவலா் ஆனந்த், மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் நளினி ஜெகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்
Next Story

