நாகர்கோவிலில் முன் விரோதத்தில் மோதல்

X
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கேசவ திருப்பாப்புரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் மதன் (20). கடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இவருக்கும் வாத்தியார் விளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் அகிலன் (21), நாகேந்திரன் மகன் விக்னேஷ் (21), மற்றும் ஆதி (21) ஆகியோர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன் விரோதத்தில் சம்பவத்தன்று மெட்டூணிமடத்தில் மதன் நின்று கொண்டிருந்தபோது அகிலன், விக்னேஷ், ஆதி ஆகியோர் மதனை வழிமறித்து தகராறு செய்து இரும்பு பைப்பால் தாக்கினார்களாம். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் திரண்டதை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அகிலன், விக்னேஷ், ஆதி ஆகியோர் தப்பினர். இது குறித்து மதன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ. குத்தாலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் அகிலன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story

