கோவை கருமத்தம்பட்டி அருகே டெய்லர் கடையில் தீ விபத்து !

மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் டெய்லர் கடை முழுவதும் சேதம்.
கோவை மாவட்டம் சூலூர் வட்டம், கருமத்தம்பட்டி அருகே செந்தில்நகர் பகுதியில் உள்ள டெய்லர் கடையில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடை உரிமையாளர் ராமநாதன் வெளியூரில் சென்றிருந்த நிலையில், மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கடையின் சட்டர் வழியாக புகை வெளியேறியதை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால், கடையில் இருந்த அனைத்து பொருட்களும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.
Next Story