கோவை: பட்டா இடத்தை அளந்து கொடுக்க தீபாவளி நாள் வரை கெடு !
கோவை மாவட்டம் சூலூர் வட்டம், இருகூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1996ஆம் ஆண்டு 249 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், நிலம் அளவீடு செய்து வழங்கப்படாமல் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இதை எதிர்த்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐஎம் உள்ளிட்ட அமைப்புகள் இருகூர் டைனமோ கிளப் மைதானத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். போராட்டம் துவங்குவதற்கு முன்பு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் நாகராஜ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 20 நாட்களுக்குள் நிலம் அளவீடு செய்து வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததுடன், எழுத்துப்பூர்வமாகவும் அறிவிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
Next Story




