கோவையில் எண்ணெய் கடையில் பயங்கர தீ விபத்து !
கோவை, கணியூர் பகுதியில் உள்ள பாலமுருகன் என்பவரின் எண்ணெய் கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணெய் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரணம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story



