காட்டுப் பன்றிகளை அழிக்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்!

காட்டுப் பன்றிகளை அழிக்க மத்திய அரசு உரிமை வழங்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரியில் செய்தியாளர்களிடம் அவர்  நேற்று கூறியது: தமிழ்நாட்டிலேயே அதிக நலத்திட்டங்களைப் பெற்றுள்ள பகுதி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்தான். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், எம்எல்ஏ ஆகியோரின் நிதிகள், தமிழக அரசின் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ. 110 கோடிக்கு இந்த ஒன்றியத்தில் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் சிறை தண்டனைகளுக்கு உள்ளாகின்றனர். இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் யார் மீதும் குற்றம் சுமத்த நான் தயாராக இல்லை. காட்டுப் பன்றிகளால் இங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். காட்டுப் பன்றிகளை விவசாயிகளே அழிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனில், தேசிய வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். எனவே, தேசிய வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் செய்து, காட்டுப் பன்றிகளை அழிக்க விவசாயிகளுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் அதிகாரம் கொடுத்தால்தான், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றார்.
Next Story