திருவண்ணாமலையில் பாலியல் பலாத்கார வழக்கில் இரு போலீசார் கைது

X
திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 19 வயது பெண்ணை பாலினல் வன்கொடுமை செய்த இரவு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து வாழை தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அப்போது வாகனத்தின் ஓட்டுனர் தனது அக்கா மற்றும் அக்கா மகள் 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோயிலுக்கு செல்ல உடன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார். திருவண்ணாமலை புறவழிச்சாலை ஏந்தல் அருகே இரவு சுமார் 2 மணி அளவில் வந்துள்ளனர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது, ஓட்டுனர் வாழை தார் ஏற்றி வந்ததாகவும், தன்னுடன் எனது உறவினர் கோயிலுக்கு செல்ல வந்துள்ளார்கள் என தெரிவித்தாராம். பின்னர் போலீசார் நாங்கள் பெண்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்து சென்று விடுகிறோம் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு ஓட்டுனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸார் அவரை மிரட்டி 19 வயது பெண் மற்றும் அவரது தாய் ஆகிய இவருரையும் அழைத்து சென்று ஏந்தல்கிராமம் அருகே 19 வயது பெண்ணை இரண்டு போலீஸாரும் தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸார் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனராம். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவ்வழியாக சென்றவர்கள் இரண்டு பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்து, பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். இதனிடையே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீஸார் சுரேஷ்ராஜ்,சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

