சத்தியம்கங்கலம் அருகே நாகாத்தம்மன் கோவிலில் நடைபெற்ற மகா சண்டிகா மற்றும் திருமண நீக்கும் யாகத்தில் கலந்து கொண்டவர்கள்

சத்தியம்கங்கலம் அருகே நாகாத்தம்மன் கோவிலில் நடைபெற்ற மகா சண்டிகா மற்றும் திருமண நீக்கும் யாகத்தில் கலந்து கொண்டவர்கள்
சத்தி நாகாத்தம்மன் கோயில் திருமணத்தடை நீங்க யாகம் சசத்தி - பண்ணாரி ரோட்டில் புதுவடவள்ளி கிராமத்தில் ஸ்ரீ நாகாத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் விநாயகர், புற்று உடன் கூடிய , நாகாத்தம்மன், ராகு, கேது, சனி பகவான், கருப்பராயன் தனித்தனி சன்னதிகள் உள்ளன. புரட்டாசி மாதம் துர்க்கா தேவியின் வடிவமான சண்டிகா தேவிக்கு ஸ்ரீ மகா சண்டிகா யாகம் நடைபெற்றது. பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றும், கோபத்தைக் குறைப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்காக சண்டிகா யாகமும் திருமணம் ஆக ஆண்கள் பெண்கள் கலந்து கொண்ட திருமண தடை நீக்கும் யாகம் உள்ளிட்ட 13 யாகங்கள் நடைபெற்றது. யாகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story