சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை – கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

X
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி ஷேக் பாவாவுக்கு, கோவை போக்சோ நீதிமன்றம் சாகும்வரை ஆயுள் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தது. 2019 ஆம் ஆண்டு சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த நிலையில், பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அரசு வழங்க உத்தரவிட்டார்.
Next Story

