கோவையில் நிறுத்தப்பட்ட கார் தீப்பிடித்து எரிந்து சாம்பல் !

X
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிமடை பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் தனது காரை அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தியிருந்தார். அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து தீக்கினறல்கள் பறந்தன. சில நிமிடங்களில் தீ பரவி, கார் முழுவதும் மளமளவென எரிந்து கொண்டது. உடனடியாக தகவல் அறிந்த கோவை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், கார் முழுவதும் எரிந்து சாம்பலாகியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீப்பற்றியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
Next Story

