கோவை: திருக்குறள் ஒப்பிக்கும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

கோவை: திருக்குறள் ஒப்பிக்கும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
X
பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி – பரிசுகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் அறிவிப்பு.
கோவை மாவட்டத்தில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான திருக்குறள் ஒப்பிக்கும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்றவர்களுக்கு, ஆண்டுதோறும் 15,000 ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் தமிழ் வளர்ச்சித்துறை வழங்குகிறது. 2025-26 ஆண்டுக்கான விண்ணப்பங்களை கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது www.tamilvalarchithuraitn.gov.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். விவரங்களுக்கு 0422-2300718 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.
Next Story