வடகாட்டில் பைக்கில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

வடகாட்டில் பைக்கில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
X
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை, கொத்தமங்கலத்தில் இருந்து வடகாட்டிற்கு ராஜேந்திரன்(45) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். வடகாடு அடுத்த அய்யனார் கோவில் அருகே உள்ள கிராம சாலையில் சென்றபோது பைக்கில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து,அவரது மனைவிஅளித்த புகாரில் வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story