சங்கரன்கோவில் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை துரைவைகோ திறந்து வைத்தார்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி நிதியிலிருந்து சத்திரப்பட்டி ஊராட்சி குலசேகரப்பேரி கிராமத்தில் 8 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை, குருவிகுளம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் குடிநீர் வசதி, வாகைகுளம் கிராமத்தில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் கட்டிடத்தை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ தலைமையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், மதிமுக துணை பொதுச்செயலாளர் தி,மு.ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான மதிமுக கட்சியில் நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் உடன் இருந்தனர்.
Next Story

