ஓசூர் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை தாக்கிய கணவர் குடும்பத்தார் மீது பெண் புகார்.

ஓசூர் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை தாக்கிய கணவர் குடும்பத்தார் மீது பெண் புகார்.
X
ஓசூர் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை தாக்கிய கணவர் குடும்பத்தார் மீது பெண் புகார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கர்நாடக எல்லையில் உள்ள உரிகம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலஜா. இவருக்கும் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த அருண்குமாருக்கும் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர். ஸ்ரீலஜாவை வரதட்சணை கேட்டு அடித்து சாலைக்கு இழுத்து வந்து அவரை கொடூரமாக தாக்கியதாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த வீடியோ ஆதாரத்துடன் தனது கணவர் அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆனேக்கல் காவல் நிலையத்தில் ஸ்ரீலஜா புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story