மாணவியை கர்ப்பமாக்கிய அக்காள் கணவர் கைது

மாணவியை கர்ப்பமாக்கிய அக்காள் கணவர் கைது
X
மதுரை திருமங்கலம் அருகே பிளஸ் ஒன் மாணவியை அவரது அக்காள் கணவர் பலாத்காரம் செய்து போக்சோவில் கைதாகி உள்ளார்.
மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பெண் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள். இதில் மூத்த மகளை திருப்பதி (37) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவரின் 2வது 16 வயதுடைய மகள் பிளஸ் ஒன் படித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்ற போது 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவர அதிர்ச்சியடைந்த தாய் மாணவியிடம் விசாரித்த போது அக்காள் கணவர் திருப்பதி தன்னை பலமுறை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலாத்காரம் செய்ததாக கூற உடனே தாய் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் திருப்பதியை போக்சோவில் கைது செய்தனர்.
Next Story