சோழவந்தான் பேரூராட்சியில் கவுன்சிலர்களிடையே மோதல் .பரபரப்பு

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நேற்று நடந்த கூட்டத்தில் 14வது வார்டு கவுன்சிலர் நிஷாவின் கணவர் கவுதமராஜா மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சில நிமிடங்களில் கைகலப்பாக மாறியது. நாற்காலிகளை தூக்கி எறிந்து ரணகளமாக்கினர்.உடனே செயல் அலுவலர் செல்வகுமார் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் வந்து இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில் திமுக கவுன்சிலராக இருந்து கொண்டு தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக கவுன்சிலர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Next Story

