ஊத்தங்கரை:அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள உப்பாரப்பட்டிபிரிவு சாலையில் போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது காரப்பட்டு பகுதியில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது அந்த லாரியில் அனுமதி இன்றி மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து மண் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து அதன் டிரைவர் மற்றும் உரிமையாளரான கோவிந்தராஜை என்பவரை கைது செய்தனர்
Next Story

