தாயுடன் கருத்துவேறுபாடு , கிணற்றில் விழுந்த மகனை உயிருடன் மீட்ட மீட்பு படையினர்

X
Komarapalayam King 24x7 |1 Oct 2025 7:03 PM ISTகுமாரபாளையத்தில் தாயுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கிணற்றில் விழுந்த மகனை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்
குமாரபாளையம் அருகே உள்ள பெராந்தார்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், 35. இவர் தேநீர் கடை ஒன்றில் பலகாரம் போடும் பணி செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு தனது பணியை முடித்துக் கொண்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்தவரை, அவர் தாயார் திட்டியதாக தெரிகிறது. இதனால் மணமடைந்த ராஜ்குமார் வீட்டை விட்டு வெளியே வந்தவர் பாலிகாடு பகுதியில் உள்ள சுமார் 30 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். நள்ளிரவில் அவர் கிணற்றில் குதித்ததை கண்ட அருகில் வசிப்பவர்கள் குமாரபாளையம் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். தகவலை அறிந்து விரைந்து வந்த மீட்புத்துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி, நீரில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த இளைஞர் ராஜ்குமாரை கயிற்றின் உதவியால் உயிருடன் மீட்டனர். மயக்கம் அடைந்த நிலையில் இருந்த இவர் குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
