அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

X
Komarapalayam King 24x7 |1 Oct 2025 7:07 PM ISTகுமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்து பேருந்து நிலையம் மற்றும் ஆட்டோ நிலையங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. கல்லூரி முதல்வர் ( பொ ) சரவணாதேவி தலைமை வகித்தார். குமாரபாளையம் எஸ்.எஸ்.ஐ. பொன்னுசாமி பங்கேற்று துண்டு பிரசுரங்கள் வழங்கி துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் போதை பொருள் aஎதிர்ப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரமேஷ் குமார் செய்திருந்தார்.
Next Story
