நெகிழி தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
தருமபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழி இல்லா தருமபுரி விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், நேற்று புதன்கிழமை மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.தற்போது பண்டிகை காலம் துவங்க உள்ளதால் பொதுமக்களிடையே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிக அளவில்காணப்பட வாய்ப்புள்ளது. எனவே பொது மக்களிடையே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டு நெகிழி இல்லா தருமபுரி விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.நெகிழி பொருட்களுக்கு மாற்றாக 700 மஞ்சப்பைகளை பொது மக்களுக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் நெகிழி பைகளை தவிர்த்து, தொடர்ந்து துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் கீழ், மஞ்சப்பைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் வழங்கினார்.
Next Story





