கந்தர்வகோட்டை தொடர் திருட்டால் மக்கள் அச்சம்!

X
கந்தர்வகோட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள மதுபான கடையில் கடந்த மாதம் திருட்டு நடந்தது. இதேபோல் கந்தர்வகோட்டை நகரில் உள்ள ஜவுளிக்கடை, டீக்கடைகளிலும் அடுத்தடுத்து இரவு நேரங்களில் பொருட்கள் திருடி செல்லப்பட்டன. தொடர் திருட்டால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள், வியா பாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

