கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு மக்கள் தேசம் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல்.
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு மக்கள் தேசம் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல். கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் பிரச்சாரத்தின் போது உயிரிழந்த குடும்பங்களை மக்கள் தேசம் கட்சி சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறப்பட்டது. இந்த நிகழ்வில் மக்கள் தேசம் கட்சி நிறுவனர் தலைவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆசைத்தம்பி, மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் பிரசாத், கரூர் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் லோகநாதன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் கோமதி, உப்பிலமங்கலம் பேரூர் கழகச் செயலாளர் சிவா, பரமத்தி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தி. சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரேம்குமார் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய் பீம் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உள்ளிட்ட சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, இந்த துயரச்சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் தேசம் கட்சியின் சார்பில் தலைவர் ஆசைத்தம்பி கோரிக்கை வைத்தார்.
Next Story




