கோவையில் இந்து முன்னணி சார்பில் ஆயுத பூஜை விழா கோலாகலம் !

ஆட்டோக்களை அலங்கரித்து வரிசையாக நிறுத்தி பூஜை செய்த இந்து முன்னணி உறுப்பினர்கள் கொண்டாட்டம்.
நம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடப்படும் ஆயுத பூஜை விழா, கோவையில் இந்து முன்னணி சார்பில் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் பயன்படும் ஊசிகள், கத்திகள், கருவிகள், வாகனங்கள் என அனைத்துக்கும் மரியாதை செலுத்தும் இந்த விழாவை முன்னிட்டு, இந்து ஆட்டோ முன்னணியினர் கோவையில் 17க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக, ரத்தினபுரி ஏழாம் நம்பர் லட்சுமிபுரம் பகுதியில் முன்னணியினர் தாங்கள் ஒட்டி வரும் ஆட்டோக்களை சுத்தம் செய்து அலங்கரித்து வரிசையாக நிறுத்தினர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடத்தி, வாகனங்களின் பாதுகாப்பு, செல்வ வளம் பெருக்கம் வேண்டி வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினருக்கும் பயணிகளுக்கும் பிரசாதங்கள் வழங்கி அனைவரும் கலந்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
Next Story