கோவை: துர்கா பூஜை கொண்டாட்டம் கோலாகலம் !
கொல்கத்தாவைப் போன்று கோவையிலும் பெங்காலி சமூகத்தினர் துர்கா பூஜையை விமரிசையாக கொண்டாடினர். ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் நவமி நாளான நேற்று இறுதி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை ஓவியப் போட்டி, இரவு நெருப்பு நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக கொல்கத்தாவில் இருந்து ஆர்கெஸ்ட்ரா மற்றும் உணவு சமையலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெங்காலி மக்கள் மட்டுமன்றி கோவையிலுள்ள பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு துர்கை அம்மனை வழிபட்டு சென்றனர்.
Next Story



