கோவை: சேவல் திருட்டு – சி.சி.டி.வி காட்சிகள் வைரல் !

கோவை: சேவல் திருட்டு – சி.சி.டி.வி காட்சிகள் வைரல் !
X
டி-ஷர்ட்டுக்குள் சேவல் வைத்து தப்பிய டிக்-டாக் வாலிபர் – சி.சி.டி.வி காட்சிகள் வைரல்.
கோவை, போத்தனூர் அருகே சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் மரப்பட்டறை நடத்தி வரும் கனகராஜின் வீட்டில் வளர்த்த சேவல் திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்-டாக் வீடியோவில் பிரபலமான வாலிபர் ஒருவர் சேவலை பிடித்து டீ-ஷர்ட்டுக்குள் மறைத்து தப்பிச் செல்வது சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகி உள்ளது. பின்னர், அருகே காத்திருந்த நண்பனின் இருசக்கர வாகனத்தில் ஏறி இருவரும் தப்பிச் சென்ற காட்சியும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கனகராஜ் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story