போச்சம்பள்ளி அரசு மகளிர் பள்ளி முன்பு சின்டெக்ஸ் டேங்க் புதர் மண்டி கிடக்கும் அவலம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்பு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் உள்ளது. இந்த தண்ணீரைக் கொண்டு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது சின்டெக்ஸ் டேங்க் பகுதி முழுவதும் புதர் மண்டி கிடைக்கிறது. மேலும் தண்ணீர் தொட்டியானது சுத்தம் செய்யாமல் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால் நோய் தொற்றால் மக்கள் அவதியுற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே புதர் மண்டி கிடக்கும் பகுதிகளை சுத்தம் செய்து சின்டெக்ஸ் டேங்க் சுத்தம் செய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

