கோவை மாநகரில் தெருநாய்களை இரவில் பிடித்து கருத்தடை செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

கோவை மாநகரில் தெருநாய்களை இரவில் பிடித்து கருத்தடை செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்
X
கோவையில் தெருநாய் அதிகரிப்பு – இரவில் பிடித்து கருத்தடை செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை.
கோவை மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்து, தற்போது ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். 2006-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வந்தாலும், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையில் மாதந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் சிகிச்சை பெறுவதாக மருத்துவத் தரவுகள் தெரிவிக்கின்றன. பகலில் பிடிக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை; தெருநாய்கள் பதுங்கி விடுகின்றன. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் அவை சாலைகளில் அதிகம் காணப்படுவதால் எளிதாக பிடிக்க முடியும். எனவே தெருநாய்களை இரவில் பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story