தவெக சார்பில் ஒட்டப்பட்டுள்ள கண்டன சுவரொட்டியால் பரபரப்பு

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் தமிழக வெற்றி கழக இளைஞரணி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள கண்டன சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூரில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் காவல்துறை பல்வேறு நடவடிக்கையில் மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக வெற்றிக்கழக திண்டுக்கல் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் கண்டன சுவரொட்டிகள் வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் கரூர் சம்பவத்தில் தனிநபர் ஆணையம் விசாரணையில் இருக்கும் போது தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மதியழகனை கைது செய்தும், பொதுச் செயலாளர் ஆனந்தை கைது செய்ய துடிக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டிக்கிறோம் என்ற வாசங்களுடன் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
Next Story

