படர்ந்தபுளியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

X
விளாத்திகுளம் அருகே படர்ந்தபுளியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம்,எட்டயபுரம் வட்டம்,படர்ந்தபுளியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோலைராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்வாணன், கிளைச் செயலாளர்கள் கற்பகராஜ்,சுப்புராஜ், சுரேஷ் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆண்டாளம்மாள் தொழிலதிபர் மனோகரன் ஒன்றிய விவசாய அணி கிருஷ்ணசாமி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

