விஜயதசமியை முன்னிட்டு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் சேர்ப்பு

X
திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று 02.10.25 புதிதாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பாரதிபுரம், ராஜலட்சுமிநகர், வேடப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். புதிதாக சேர்க்கக்கூடிய குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து குழந்தையின் ஆதார் கார்டு, பிறப்புச்சான்றிதழ் மட்டும் வாங்கிக் கொண்டு எளிமையான முறையில் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே இந்த பள்ளியில் தான் LKG மற்றும் UKGயில் 102 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் விஜயதசமியை முன்னிட்டு மேலும் பல குழந்தைகள் கல்வி பயில சேர்ந்துள்ளனர். இந்தப் பள்ளியில் குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் சௌரியங்களும் உள்ளதால் அதிகளவில் குழந்தைகளுக்கு சேர்த்துள்ளனர். மேலும் இந்த பள்ளியில் LKG மற்றும் UKG கயிறு பயின்று வரும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மதிய உணவு திட்டம் மூலம் முட்டையுடன் கூடிய உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகத்தின் இச்செயலுக்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
Next Story

