கைத்தறி ஆடைகளை பண்டிகை நாட்களில் வாங்கி நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்-பரணி குமார் கரூரில் வேண்டுகோள்.
கைத்தறி ஆடைகளை பண்டிகை நாட்களில் வாங்கி நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்-பரணி குமார் கரூரில் வேண்டுகோள். கரூரில் இன்று துவங்கி தொடர்ந்து 16 நாட்களுக்கு நடைபெறும் கைத்தறி கண்காட்சி துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த கைத்தறி கண்காட்சி குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த கைத்தறி இயக்குனர் பரணிகுமார்.கண்காட்சியில் 60 விதமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட கைத்தறி ஆடைகளை பண்டிகை நாட்களில் வாங்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் எனவும் மூன்று கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயம் செய்திருந்தாலும் ஒன்னறையில் இருந்து 2 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடந்திட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
Next Story




