கரூரில் காந்தி பிறந்த நாள் காமராஜர் நினைவு நாள் மலர்கள் தூவி பிஜேபினர் மரியாதை.
கரூரில் காந்தி பிறந்த நாள் காமராஜர் நினைவு நாள் மலர்கள் தூவி பிஜேபினர் மரியாதை. இந்திய விடுதலை போராட்டத்தை முன்னின்று நடத்திய மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் நினைவு தினத்தை தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கும் காமராஜர் திருவுருவப்படத்திற்கும் கட்சியின் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் தலைமையில் மலர்மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
Next Story






