கோவை: பெண் தவறவிட்ட தங்க நகைப்பை மீட்பு !
கோயம்புத்தூர் ரெயில்வே பாதுகாப்பு படை காவலர் ரினீஷ் அவர்களின் விழிப்புணர்வால், பெண் பயணியொருவர் இழந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள 25 சவரன் தங்க நகைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. செப்டம்பர் 30-ஆம் தேதி கண்ணூர்–கோயம்புத்தூர் பயணிகள் ரயிலில் பயணித்த சுஷா என்பவர் தன் பையை இழந்ததாக கவலை தெரிவித்தார். உடனடியாக தேடுதல் மேற்கொண்ட காவலர் ரினீஷ், ரயிலில் நீல நிற பையை கண்டுபிடித்தார். அதிலிருந்த தொடர்பு எண்ணை பயன்படுத்தி விசாரித்தபோது, தவறுதலாக பையை எடுத்துச் சென்றவர் கேரள சைபர் செல் சப் இன்ஸ்பெக்டர் உண்ணிக்கிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்பு கொண்டு, ஷோர்னூர் RPF அலுவலகத்தில் பையை ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சரிபார்ப்பு செய்யப்பட்டு, தங்க நகைகள் நிரப்பிய பை சுஷாவிடம் பாதுகாப்பாக மீண்டும் நேற்று ஒப்படைக்கப்பட்டது. காவலர் ரினீஷின் விரைந்து செயல்பட்ட நற்பணியை பாராட்டி, பயணி சுஷா தனது நன்றியை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story



